செய்திகள்

தெ.ஆ. அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தீபக் ஹூடா, ஷமி விலகல்? 

26th Sep 2022 09:32 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தீபக் ஹூடா, ஷமி  விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. முதல் டி20 செப்.28ஆம் நாள் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. 2வது, 3வது போட்டிகள் முறையே அக்.2, அக்.4இல் குவஹாட்டி, இந்தூரில் நடைபெற உள்ளது. 

இதையும் படிக்க: அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா கைஃப்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், சஹால், அக்‌ஷர் படேல், பும்ரா, ஹர்ஷல் படேல், தீபக் சஹார்,முகமது ஷமி. 

ADVERTISEMENT

இதில் இருந்து தீபக் ஹூடா காயம் காரணமாக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவாரெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷமிக்கு கரோனா தொற்று குணமாகாததால் அவரும் விலகுவதற்கான் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT