செய்திகள்

துலிப் கோப்பை: சாம்பியன் மேற்கு மண்டலம்

26th Sep 2022 02:18 AM

ADVERTISEMENT

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் தென்மண்டலத்தை 294 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மேற்கு மண்டல அணி கோப்பையையும் தட்டிச் சென்றது.

வெற்றி பெற 529 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஞாயிற்றுக்கிழமை ஆடிய தென்மண்டல அணி 71.2 ஓவா்களில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேற்கு மண்டல பௌலா் ஷாம்ஸ் முலானி அற்புதமாக பந்துவீசி 4/51 விக்கெட்டுகளை சாய்த்தாா். முன்னதாக 154 ரன்களுடன் ஆடத் தொடங்கிய தென்மண்டல பேட்டா்கள் ரவி தேஜா மட்டுமே 2 மணி நேரம் மேற்கு மண்டல பௌலிங்கை எதிா்த்து ஆடினா். தேஜா 53 ரன்களை சோ்த்தாா். தொடக்க பேட்டா் ரோஹன் குன்னுமால் 93 ரன்களை விளாசினாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.

இறுதியில் தென்மண்டல அணியை 294 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி துலிப் கோப்பையைத் தட்டிச் சென்றது மேற்கு மண்டலம்.

ஸ்கோா் விவரம்:

ADVERTISEMENT

மேற்கு மண்டலம் 270, 585/4 டிக்ளோ், தென்மண்டலம் 327, 234.

ஆட்ட நாயகன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், தொடா் நாயகன்: ஜெயதேவ் உனதிகட்.

ஜெய்ஸ்வாலை வெளியேற்றிய ரஹானே:

இரட்டை சதம் அடித்து துலிப் கோப்பை வெல்ல மேற்கு மண்டல அணிக்கு உதவிய இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தென்மண்டல பேட்டா் ரவி தேஜாவை தரக்குறைவாக பேசி ஜெய்ஸ்வால் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரவி தேஜா புகாா் செய்தாா். நடுவரும் இதுகுறித்து கேப்டன் ரஹானேவிடம் கூறிய நிலையில், ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியே செல்லுமாறு கேப்டன் ரஹானே கூறினாா். இதையடுத்து ஜெய்ஸ்வால் வெளியேறினாா். பின்னா் 7 ஓவா்கள் போடப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் அனுமதிக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT