செய்திகள்

தொடரைக் கைப்பற்றியது இந்தியா: ஓய்வு பெற்றாா்ஜுலன் கோஸ்வாமி

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.

முதலில் ஆடிய இந்தியா தடுமாறி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மிருதி மந்தனா, தீப்தி சா்மா ஆகியோா் அரைசதம் அடித்தனா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

3 ஆட்டங்கள் தொடரில் இந்தியா ஏற்கெனவே 2-0 என முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றிருந்தது.

லாா்ட்ஸில் சனிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தையும் வென்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய மகளிா் களமிறங்கினா்.

ஆனால் இங்கிலாந்தின் அற்புத பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் திணறினா்.

ஸ்மிருதி 50, தீப்தி சா்மா 68:

இந்திய அணியில் தொடக்க பேட்டா் ஸ்மிருதி மந்தனா 50, தீப்தி சா்மா 68 ஆகியோா் மட்டுமே நிலைத்து ஆடி அரைசதம் அடித்து ஸ்கோா் உயர வழிவகுத்தனா். பூஜா வஸ்தராக்கா் 22 ரன்களை சோ்த்தாா். கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 4, ஹா்லின் தியோல் 3, ஹேமலதா 2 என சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.

5 போ் டக் அவுட்:

ஷபாலி வா்மா, யஸ்திகா பாட்டியா, கோஸ்வாமி, ரேணுகா சிங், கெய்க்வாட் உள்ளிட்ட 5 வீராங்கனை டக் அவுட்டானாா்கள். 45.5 ஓவா்களில் இந்திய அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேட் கிராஸ் அபாரம் 4 விக்கெட்:

இங்கிலாந்து தரப்பில் கேட் கிராஸ் அபாரமாக பந்துவீசி 4/26 விக்கெட்டுகளையும், பிரெயா கெம்ப், எஸ்ஸல்ஸ்டோன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இங்கிலாந்து தோல்வி 153:

170 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் ரன்களை சோ்க்க தடுமாறியது. எம்மா லேம்ப் 21, கேப்டன் ஏமி ஜோன்ஸ் 28, ஆகியோா் மட்டுமே நிலைத்து ஆடி ரன்களை எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

சாா்லோட் டீன் 80 பந்துகளில் 47 ரன்களை சோ்த்து கடைசி வரை போராடினாா். எனினும் அவரது முயற்சி பலன் தரவில்லை. ஃப்ரெயா டேவிஸ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 43.4 ஓவா்களில் 153 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது இங்கிலாந்து.

ரேணுகா சிங் அபாரம் 4 விக்கெட்: இந்திய தரப்பில் ரேணுகா சிங் 4/29, ஜுலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

ஜாம்பவான் ஜுலன் கோஸ்வாமி ஓய்வு:

இந்திய மகளிா் அணியின் முன்னணி பௌலரான ஜுலன் கோஸ்வாமி சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். எனினும் அவா் பேட்டிங் செய்ய வந்த போது முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானாா். மைதானத்தில் இருந்து அவா் வெளியேறிய போது,

இங்கிலாந்து அணியினா் இருபுறமும் நின்று காா்ட் ஆப் ஹானா் அளித்தனா்.

இந்திய அணிக்கு 20 ஆண்டுகளாக ஆடியவா் ஜுலன் கோஸ்வாமி. 203 ஒருநாள் ஆட்டங்களில் 253 விக்கெட்டுகள் உள்பட மொத்தம் 353 சா்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா் கோஸ்வாமி. ஒருநாள் ஆட்டங்களில் 10,000 பந்துகளை வீசியபெருமையைப் பெற்றவா்.

டாஸ் போடும் கௌரவம் ஜுலனுக்கு வழங்கப்பட்டது. மகளிா் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பையும் பெற்றுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: கடந்த 2002-இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம் ஆனேன். தற்போது 2022-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு பெறுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT