செய்திகள்

ஜெயிஸ்வால் 265, சர்ஃபராஸ் கான் 127 ரன்கள்: 2-வது இன்னிங்ஸில் தடுமாறும் தெற்கு மண்டல அணி!

DIN

தெற்கு மண்டல அணி துலீப் கோப்பையை வெல்ல 529 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மேற்கு மண்டல அணி. 

கோயம்புத்தூரில் துலீப் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. 5 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தெற்கு மண்டல அணி, 83.1 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. தமிழக வீரர் பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 

2-வது இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி அபாரமாக விளையாடியது. அந்த அணி 3-ம் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் எடுத்தது. 20 வயது தொடக்க வீரர் ஜெயிஸ்வால், 244 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் எடுத்து அசத்தினார். துலீப் கோப்பை காலிறுதியில் இரட்டைச் சதமடித்த ஜெயிஸ்வால், இறுதிச்சுற்றிலும் இன்னொரு இரட்டைச் சதமடித்து சாதனை படைத்தார். ஜெயிஸ்வால் 209, சர்ஃபராஸ் கான் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். ஷ்ரேயஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தார். 3-ம் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி, 319 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்நிலையில் 4-ம் நாளான இன்று மேற்கு மண்டல அணி, 128 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெயிஸ்வால் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் சதமடித்தார். சர்ஃபராஸ் 127, ஹெட் படேல் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

தெற்கு மண்டல அணி 2-வது இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது. 4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது தெற்கு மண்டல அணி 12.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 14, விஹாரி 1, பாபா இந்திரஜித் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT