செய்திகள்

சிகிச்சை பெற்று வரும் ஜடேஜாவை ஜாலியாக சீண்டும் ஷிகர் தவான்! (விடியோ)

24th Sep 2022 04:21 PM

ADVERTISEMENT

காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் ஜடேஜாவை ஜாலியாக சீண்டும் விதமாக விடியோ வெளியிட்டுள்ளார் ஷிகர் தவான். 

இந்த மாதத் தொடக்கத்தில் காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவரால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற முடியாமல் போனது. இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. 

தற்போது சிகிச்சை பெற்று வரும் ஜடேஜாவுடன் ரீல்ஸ் செய்து ஜாலியாக சீண்டியுள்ளார் ஷிகர் தவான். ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விடியோவை பதிவிட்டு, “இப்போது ஆட முடியாது இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்” என தலைப்பிட்டு ஜடேஜாவை சுற்றி சுற்றி ஆட்டம் போட்டுள்ளார்.

கலில் அஹமது, அர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்களும் இந்த விடியோவுக்கு கமெண்டில் சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளனர். 

ADVERTISEMENT

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

ADVERTISEMENT
ADVERTISEMENT