செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20: 63 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! (ஹைலைட்ஸ் விடியோ)

24th Sep 2022 01:36 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. 

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது. 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 3வது டி20 போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 35 பந்துகளில் 81 ரன்களும், டுக்கெட் 42 பந்துகளில் 70 ரன்களும், வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷான் மசூத் மட்டுமே 66 ரன்கள் எடுத்தார். குஷ்தில் ஷா 29 ரன்களும், மொஹமது நவாஸ் 19 ரன்களும் எடுத்தனர். மற்றனைத்து வீர்ரகளும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 

ஹாரி புரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 7 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது. அடுத்தப் போட்டி நாளை (செப்.25) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கராச்சியில் நடைபெறும். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT