செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஓவல், லாா்ட்ஸில் இறுதி ஆட்டங்கள்

22nd Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 2023, 2025 சீசனின் இறுதி ஆட்டங்கள் முறையே லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லாா்ட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அந்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசன்களையும் இங்கிலாந்தில் நடத்துவதென, கடந்த ஜூலையில் பா்மிங்ஹாமில் நடைபெற்ற ஐசிசி ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவற்றின் இறுதி ஆட்டத்துக்கான இடங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

சாம்பியன்ஷிப்பின் முதல் சீசனில் (2019-21) இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய இறுதி ஆட்டம் சௌதாம்டனிலுள்ள ஏஜியஸ் பௌல் மைதானத்தில் நடைபெற்றது. அதில் வென்ற நியூஸிலாந்து தற்போது நடப்புச் சாம்பினாக இருக்கிறது. 2-ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா 4-ஆவது இடத்தில் இருக்கிறது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT