செய்திகள்

ஹாட்ரிக் சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்த பாண்டியா : இந்தியா 208 ரன்கள் குவிப்பு! 

20th Sep 2022 08:52 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 208 ரன்களை எடுத்துள்ளது. 

டாஸ் வென்ற ஆஸி. அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கே.எல்.ராகுல் ரோஹித் சர்மா இணை நன்றாகவே தொடங்கியது. கேப்டன் ரோஹித் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 46 ரன்களும் எடுத்தனர். 

இறுதியில் ஹர்திக் பாண்டியா அபாரமாக ஆடி 30 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. 

ADVERTISEMENT

ஆஸி. அணி சார்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும்,  நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும்,  கிரீன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT