செய்திகள்

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் ரோஹித் சர்மா வீரர்களுக்கு என்ன கூறுகிறார்?

18th Sep 2022 05:24 PM

ADVERTISEMENT

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியின் வீரர்கள் புது விதமான விஷயங்களை முயற்சித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் இந்த கருத்து ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்கு பின் வருவதால் முக்கியத்துவம் பெறுகிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹிந்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த துல்கர் சல்மான்! 

இந்நிலையில், ரோஹித் சர்மா, இந்திய அணி வீரர்கள் புதுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: “ நான் இந்திய அணியில் பாதுகாப்பினை கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன். உலகக் கோப்பைக்கு முன்னதாக உள்ள இரு தொடர்களிலும் ஆசியக் கோப்பையில் விளையாடிய வீரர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இந்த இரு தொடர்களிலும் மொத்தமாக ஆறு போட்டிகளில் விளையாட உள்ளோம். நாங்கள் இந்த ஆறு போட்டிகளிலும் வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம். புதுமையான முயற்சிகளை எடுக்க உள்ளோம். வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை புதுமையான முறைகளில் வெளிப்படுத்த வேண்டும். விராட் கோலி ஆசியக் கோப்பையில் வித்தியாசமாக ஸ்வீப் ஷாட்களை தேர்வு செய்து சிறப்பாக விளையாடினார். பந்துவீச்சாளர்களும் தங்களது எல்லைகளைக் கடந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும்.

நாங்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்த உள்ளோம். அது சரியாக செல்லும் பட்சத்தில் அந்த பேட்டிங் முறையே தொடரும். ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினால் அதற்காகவும் ஒரு திட்டம் எங்களிடம் இருக்க வேண்டும்.” என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT