செய்திகள்

ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அறிவிப்பு! 

18th Sep 2022 11:10 AM

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஷமிக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது ஆஸ்திரேலிய அணி. டி20 தொடர் செப்டம்பர் 20-ல் தொடங்கி 25-ல் முடிவடைகிறது. மொஹலி, நாகபுரி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, சஹால், அக்‌ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சஹார்,முகமது ஷமி. 

ADVERTISEMENT

ஷமிக்கு கரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஷமிக்கு பதிலாக மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT