செய்திகள்

இதுக்கு இல்லையா ஒரு எண்டு?: ரிஷப் பந்திடம் மன்னிப்பு கேட்கவில்லை - நடிகை ஊர்வசி

14th Sep 2022 02:51 PM

ADVERTISEMENT

 

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது.  ஒரு பேட்டியில் ஊர்வசி ரெளடேலா கூறியதாவது: வாரணாசியில் எனக்குப் படப்பிடிப்பு இருந்தது. தில்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. இரவு தான் தில்லிக்கு வந்தேன். தில்லியிலும் முழு நாளும் படப்பிடிப்பு இருந்தது. அப்போது என்னைப் பார்க்க வந்த ஆர்.பி. ஹோட்டலிலேயே காத்திருந்தார். அறைக்கு வந்து நான் தூங்கிவிட்டேன். எந்த போன் அழைப்பையும் நான் எடுக்கவில்லை. போனை எடுத்துப் பார்த்தால் 16 மிஸ்ட் கால்கள் இருந்தன. இது எனக்குக் கவலையை அளித்தது. என்னைப் பார்க்க ஒருவர் வந்து அவ்வளவு நேரம் காத்திருந்தும் என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் எப்போது மும்பை வருகிறீர்களோ அப்போது பார்க்கலாம் என அவரிடம் கூறினேன். நாங்கள் மும்பையில் சந்தித்தோம் என்றார். ஆர்பி யார் எனக் கேட்கப்பட்டதற்கு அதை நான் சொல்ல மாட்டேன் என்று கூறினார். 

இதையடுத்து ரிஷப் பந்த் இன்ஸ்டகிராமில் ஒரு பதிவு எழுதி அதை நீக்கினார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது: தலைப்புச் செய்திகளி இடம்பிடிப்பதற்காகவும் புகழுக்காகவும் மக்கள் பொய் சொல்வது வேடிக்கையாக உள்ளது. சிலர் புகழுக்காக ஏங்குவது வேதனையாக உள்ளது அவர்களைக் கடவுள் வாழ்த்தட்டும் என்று கூறி, பிறகு அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இதற்குப் பிறகு இன்ஸ்டகிராமில் ஊர்வசியும் பதில் அளித்தார். சின்னத் தம்பி பேட் பந்தில் தான் விளையாட வேண்டும். உன்னைப் போன்ற சிறியவனால் நான் அவமானப்பட மாட்டேன் என்று கூறினார்.

ADVERTISEMENT

ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் ரிஷப் பந்த் - ஊர்வசி ரெளடேலா இடையிலான சர்ச்சை தொடங்கியுள்ளது. ஒரு பேட்டியில் ரிஷப் பந்துக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா என ஊர்வசியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஸாரி, ஸாரி, ஸாரி என்றார். இதனால் ரிஷப் பந்தை அவமானப்படுத்தியதற்கு ஊர்வசி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையிலான விவகாரம் முடிவுக்கு வந்தது என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் இந்த இடத்தில் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஊர்வசி.

இன்ஸ்டகிராமில் ஊர்வசி கூறியதாவது: இப்போதெல்லாம் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விடவும் அதிகாரபூர்வ செய்திகள், மீம் பக்கங்களில் தான் அதிகமாகத் திரைக்கதைகள் எழுதப்படுகின்றன. அந்த மன்னிப்பு, என்னுடைய ரசிகர்கள், அன்பானவர்களுக்கானது என்று கூறியுள்ளார்.

இதுக்கு இல்லையா ஒரு எண்டு?!

ADVERTISEMENT
ADVERTISEMENT