செய்திகள்

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணி அறிவிப்பு, மூத்த வீரர் நீக்கம்!

DIN

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடிய மூத்த வீரர் மஹ்முதுல்லா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். லிடன் தாஸ், யாசிர் அலி, நுருல் ஹசன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹுசைன் சாண்டோ ஆகியோர் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடிய பர்வேஸ் ஹுசைன், அனாமுல் ஹக், மெஹதி ஹசன், முகமது நயிம் போன்றோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான இதே அணி, அக்டோபர் 7 முதல் 14 வரை நடைபெறவுள்ள முத்தரப்புப் போட்டியிலும் பங்குபெறவுள்ளது. 

வங்கதேச அணி

ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), சபிர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன், லிடன் தாஸ், யாசிர் அலி, நுருல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், டஸ்கின் அஹமது, எபடாட் ஹுசைன், ஹசன் மஹ்முத், நசும் அஹமது, நஜ்முல் ஹுசைன் சாண்டோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT