செய்திகள்

71-வது சதம்: கோலி நிகழ்த்திய புதிய சாதனைகள்

9th Sep 2022 05:44 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானுக்கு எதிராகச் சதமடித்த விராட் கோலி, இதன்மூலம் புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

துபையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. கோலி 122*, ராகுல் 62 ரன்கள் எடுத்தார்கள். ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த ஆட்டத்தில் இரண்டரை  ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதமெடுத்தார் விராட் கோலி. இது அவருடைய 71-வது சர்வதேச சதம். 

ADVERTISEMENT

இந்தச் சதத்தின் மூலம் கோலி நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* சர்வதேச கிரிக்கெட்டில் இன்னிங்ஸின் அடிப்படையில் வேகமாக 71 சதங்கள் எடுத்தவர் கோலி. அதேபோல வேகமாக 24,000 சர்வதேச ரன்கள் எடுத்தவரும் கோலி தான். 

* சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்

சச்சின் - 100 சதங்கள்
கோலி - 71
பாண்டிங் -71

* டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தனி நபர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் கோலி. 122 ரன்கள்.

* டி20 ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா (4), ராகுல் (2), ரெய்னா (1), தீபக் ஹூடா (1), சூர்யகுமார் யாதவ் (1), கோலி (1) ஆகிய இந்திய வீரர்கள் சதமெடுத்துள்ளார்கள். 

* ஆசியக் கோப்பைப் போட்டியில் 19 இன்னிங்ஸில் 4 சதங்கள், 4 அரை சதங்கள் எடுத்துள்ளார் கோலி. 

* முதல் டி20 சதத்துக்கு முன்பு அதிக இன்னிங்ஸில் விளையாடிய வீரர்கள்

95 – விராட் கோலி 
82 – பால் ஸ்டிர்லிங் 
77 – பட்லர் 

* அதிக வயதில் டி20 சதமெடுத்த இந்திய வீரர்கள் 

33 வருடங்கள் 307 நாள்கள் - விராட் கோலி 
31 வருடங்கள் 299 நாள்கள் - சூர்யகுமார் யாதவ் 
31 வருடங்கள் 190 நாள்கள் - ரோஹித் சர்மா 

* சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்தது 20,000 ரன்கள் எடுத்த வீரர்களில் 50+ சராசரி வைத்துள்ள ஒரே வீரர் கோலி மட்டுமே. 

* விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில்...

வேகமான 14,000 ரன்கள் 
வேகமான 15,000 ரன்கள் 
வேகமான 16,000 ரன்கள் 
வேகமான 17,000 ரன்கள் 
வேகமான 18,000 ரன்கள் 
வேகமான 19,000 ரன்கள் 
வேகமான 20,000 ரன்கள் 
வேகமான 21,000 ரன்கள் 
வேகமான 22,000 ரன்கள் 
வேகமான 23,000 ரன்கள் 
வேகமான 24,000 ரன்கள் 

ADVERTISEMENT
ADVERTISEMENT