செய்திகள்

ஓவர்களை விரைவாக வீசி முடிக்க ஆஸி. அணி மேற்கொள்ளும் புதிய உத்தி!

19th Oct 2022 11:02 AM

ADVERTISEMENT

 

டி20 கிரிக்கெட்டில் குறிப்பிட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லையென்றால் ஐசிசி அதற்கு ஒரு தண்டனை வழங்குகிறது.

அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு (85 நிமிடங்கள்) வீசப்படும் ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து ஃபீல்டர்கள் நிற்க வேண்டும். இதனால் வட்டத்துக்கு வெளியே நான்கு ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். இதனால் எதிரணி பேட்டர்களால் அதிக ரன்கள் எடுக்க முடியும்.

இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய உத்தியைக் கையாண்டு வருகிறார்கள் ஆஸி. வீரர்கள்.

ADVERTISEMENT

அதன்படி பவுண்டரிக்குச் செல்லும் பந்துகளை எடுத்துத் தர எல்லைக்கோட்டுக்கு அருகே தங்களுடைய மாற்று வீரர்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் மைதானத்தில் உள்ள ஒரு வீரர் பவுண்டரிக்குச் சென்ற பந்தை எடுப்பதற்காக ஓடிச்செல்லத் தேவையில்லை. நேரத்தையும் வீணாக்கத் தேவையில்லை. எல்லைக்கோட்டுக்கு வெளியே நிற்கும் வீரர்கள், அந்தப் பந்தை உடனடியாக எடுத்துத் தந்துவிடுவார்கள். இதனால் நேரமும் ஓரளவு மிச்சமாகும், வீரர்களும் பந்தை எடுப்பதற்காக ஓடிச் சென்று சோர்வடைய வேண்டாம். முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இந்த உத்தி பெரிதும் கைகொடுக்கும். ஒவ்வொருமுறையும் 10 நொடிகளைச் சேமித்தாலே கடைசியில் அது ஓவர்களை முடிக்கும்போது பெரிய அளவில் உதவும்.  

ஆஸ்திரேலியாவின் இந்தப் புதிய உத்தி பற்றிய காணொளியை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.   

 

ADVERTISEMENT
ADVERTISEMENT