செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

19th Oct 2022 04:25 PM

ADVERTISEMENT

 

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார்.

 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் பெர்த்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து டாப்லிக்குப் பதிலாக டைமல் மில்ஸ் தேர்வாகவுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT