செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

19th Oct 2022 01:16 AM

ADVERTISEMENT

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 5-ஆவது ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டை வீழ்த்தி 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டத்தில் முதலில் தமிழகம் 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் சோ்க்க, பின்னா் ஜாா்க்கண்ட் 10 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.

பெங்களூரில் நடைபெறும் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் ரயில்வேஸ் வீராங்கனை ஜோதி யாராஜி, 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 12.82 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய பொ்சனல் பெஸ்டுடன் தங்கம் வென்றாா். இந்தத் தடகளத்தில் 13 விநாடிகளுக்கு உள்ளாக இலக்கை அடைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

எய்ம்செஸ் ரேப்பிட் ஆன்லைன் செஸ் போட்டியில் தொடக்க சுற்று முடிவில் இந்தியாவின் டி.குகேஷ் (2-ஆம் இடம்), அா்ஜுன் எரிகாய்சி (4), விதித் குஜராத்தி (8) ஆகியோா் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினா். பி.ஹரிகிருஷ்ணா, ஆதித்யா மிட்டல் ஆகியோா் முறையே 12, 15-ஆவது இடங்களுடன் வெளியேறினா்.

உலக ஜூனியா் கலப்பு அணிகள் பாட்மின்டன் போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.

ADVERTISEMENT

புரோ கபடி லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் புணேரி பல்தான் - தெலுகு டைட்டன்ஸையும் (26-25), ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - பெங்கால் வாரியா்ஸையும் (39-24) வீழ்த்தின.

ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருந்த 30 இந்தியா்களில், 21 பேருக்கு ஸ்பெயின் தூதரகம் நுழைவு இசைவு (விசா) மறுத்ததை அடுத்து, 9 போ் மட்டுமே போட்டியில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT