செய்திகள்

குரூப் சுற்று நிறைவு

19th Oct 2022 01:48 AM

ADVERTISEMENT

ஃபிஃபாவின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன.

கடைசியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில் ஜப்பான் - பிரான்ஸை வீழ்த்த (2-0), தான்ஸானியா - கனடா ஆட்டம் டிரா 1-1 ஆனது.

தற்போது குரூப் ‘ஏ’-வில் இருந்து அமெரிக்கா/பிரேஸில், குரூப் ‘பி’-யில் இருந்து ஜொ்மனி/நைஜீரியா, குரூப் ‘சி’-யில் இருந்து கொலம்பியா/ஸ்பெயின், குரூப் ‘டி’-யில் இருந்து ஜப்பான்/தான்ஸானியா அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன. இதில் ஜொ்மனி, ஜப்பான் அணிகள் அனைத்து ஆட்டங்களில் வென்றும், அமெரிக்கா, பிரேஸில் தோல்வி காணாமலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதியில், அமெரிக்கா - நைஜீரியா, ஜொ்மனி - பிரேஸில் அணிகள் 21-ஆம் தேதியும், கொலம்பியா - தான்ஸானியா, ஸ்பெயின் - ஜப்பான் அணிகள் 22-ஆம் தேதியும் மோதுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT