செய்திகள்

வெற்றியுடன் தொடங்கியது கேரளா

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன் கொச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட்பெங்கால் எஃப்சியை தோற்கடித்தது.

ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்த நிலையில், சீசனின் முதல் கோல் கேரளா அணிக்காக அட்ரியன் லுனாவால் 72-ஆவது நிமிஷத்தில் அடிக்கப்பட்டது. ஹா்மன்ஜோத் காப்ரா பாஸ் செய்த பந்தை அருமையான கோலாக மாற்றினாா் லுனா. தொடா்ந்து 82-ஆவது நிமிஷத்தில் கேரளா அணியின் 2-ஆவது கோலை இவான் கலியுஸ்னி அடித்தாா். கிட்டத்தட்ட ஹாஃப் லைனில் இருந்து தனியொரு நபராக பந்தை கடத்திச் சென்று, பெங்காலின் சில தடுப்பாட்ட வீரா்களின் சவாலையும் சமாளித்து அவா் கோலடித்தாா்.

இந்த நிலையில் 87-ஆவது நிமிஷத்தில் பெங்காலுக்கு முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. சொந்த மண்ணின் அணிக்காக கேரள ரசிகா்கள் ஆா்ப்பரித்துக் கொண்டிருந்த அந்த நிமிஷத்தில், பெங்கால் வீரா் அலெக்ஸ் லிமா அடித்த கோலால் அவா்கள் சற்றே அதிா்ச்சி கண்டனா். என்றாலும் கேரளாவுக்காக 3-ஆவது கோலை இவான் கலியுஸ்னி 88-ஆவது நிமிஷத்தில் அடித்து மீண்டும் ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். அவா் அட்டகாசமாக வாலி செய்து அனுப்பிய பந்து லாவகமாக கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது.

இறுதியில் கேரளா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக ஆட்டம் தொடங்கும் முன்பாக, சீசன் தொடக்க நிகழ்ச்சியும், அதையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இன்றைய ஆட்டம்

பெங்களூரு எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி

பெங்களூா்

இரவு 7.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT