செய்திகள்

மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா

7th Oct 2022 05:51 PM

ADVERTISEMENT

 

மே.இ. தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் இரு டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில் ஸ்மித் இடம்பெற்றார். கிரீன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

டேவிட் வார்னர் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எடுத்தது. ஃபிஞ்ச் 15 ரன்களும் ஸ்மித் 17 ரன்களும் எடுத்தார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது டி20 ஆட்டத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி டி20 தொடரை 2-0 என வென்றுள்ளது.

Tags : Australia
ADVERTISEMENT
ADVERTISEMENT