செய்திகள்

மகளிர் ஆசியக் கோப்பை: பாகிஸ்தானை 137 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய இந்திய அணி!

DIN

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 137 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. 

முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வென்றது. 

தனது 4-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. நிதா தர் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் மீண்டும் அணியில் இடம்பெற்றார். ஸ்னேக் ராணாவுக்குப் பதிலாக ராதா யாதவ் தேர்வாகியுள்ளார். இந்த ஆட்டத்திலும் ஷெஃபாலி வர்மா இடம்பெறவில்லை. 

இரு அணிகளும் காமன்வெல்த் போட்டியில் மோதியபோது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT