செய்திகள்

டி20 உலகக் கோப்பை: முழு உடற்தகுதியை அடைந்தாரா தீபக் ஹூடா?

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது இந்திய அணி. உலகக் கோப்பைக்குத் தேர்வான 15 வீரர்களில் 14 வீரர்கள் சென்றுள்ளார்கள். தீபக் ஹூடா உள்பட. பும்ரா அணியிலிருந்து விலகியுள்ளதால் மாற்று வீரர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதுகுறித்த தகவலைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது பிசிசிஐ. காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாத தீபக் ஹூடா, தற்போது முழு உடற்தகுதியை அடைந்துள்ளதால் இந்திய அணியினருடன் இணைந்து சென்றுள்ளார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை மேற்கொண்டார் ஹூடா. பும்ராவுக்குப் பதிலாக ஷமி இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அக்டோபர் 17 அன்று ஆஸ்திரேலியா, அக்டோபர் 19 அன்று நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக காபா மைதானத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கு முன்பு 10, 12 தேதிகளில் மேற்கு ஆஸ்திரேலியா லெவன் அணியுடனும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT