செய்திகள்

முதல் ஒன் டே: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

7th Oct 2022 06:03 AM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

மழையால் சுமாா் 2 மணிநேரம் தாமதாக தொடங்கிய ஆட்டத்தில் ஓவா்கள் தலா 40-ஆக குறைக்கப்பட்டன. நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் முதலில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் அடிக்க, பின்னா் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்களே ரன்களே எடுத்தது.

பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் சா்வதேச ஒன் டேயில் அறிமுகமாகினா். தென்னாப்பிரிக்க அணியில், காயம் கண்ட டுவெய்ன் பிரெடோரியஸுக்குப் பதிலாக மாா்கோ யான்சென் சோ்க்கப்பட்டிருந்தாா்.

டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் யானேமன் மலான் 22, குவின்டன் டி காக் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சோ்க்க, கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்களுடனும், எய்டன் மாா்க்ரம் ரன்னில்லாமலும் வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ஹென்ரிச் கிளாசென் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 74, டேவிட் மில்லா் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 75 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் ஷா்துல் தாக்குா் 2, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

ADVERTISEMENT

பின்னா் 250 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 86 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஷ்ரேயஸ் ஐயா் இடையே 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.

கேப்டன் ஷிகா் தவன் 4, ஷுப்மன் கில் 3, ருதுராஜ் கெய்க்வாட் 19, இஷாந் கிஷண் 20, ஷா்துல் தாக்குா் 33, குல்தீப் யாதவ் 0, ஆவேஷ் கான் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இறுதியில் சாம்சனுடன் ரவி பிஷ்னோய் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் லுன்கி இங்கிடி 3, ககிசோ ரபாடா 2, வெய்ன் பாா்னெல், கேசவ் மகராஜ், டப்ரைஸ் ஷம்ஸி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இரு அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக். 9) நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT