செய்திகள்

ஒருநாள்: மீண்டும் ஏமாற்றமளித்த தெ.ஆ. கேப்டன் பவுமா!

6th Oct 2022 05:33 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் லக்னெளவில் இன்று நடைபெறுகிறது.

லக்னெளவில் இன்று காலை முதல் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கத் தாமதமானது. பிறகு டாஸ் நிகழ்வு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜ் கெயிக்வாட், பிஸ்னோய் அறிமுகம் ஆகியுள்ளார்கள். காயம் காரணமாக தெ.ஆ. அணியைச் சேர்ந்த டுவைன் பிரிடோரியஸ் ஒருநாள் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ADVERTISEMENT

டி20 தொடரில் 0,0,3 என மோசமாக விளையாடி விமர்சனங்களுக்கு ஆளான தெ.ஆ. கேப்டன் பவுமா இன்று, முதல் விக்கெட் விழுந்த பிறகு களமிறங்கினார். இரண்டு பவுண்டரிகள் அடித்த பவுமா, ஷர்துல் தாக்குர் பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் அவருடைய மோசமான ஆட்டம் இன்றும் தொடர்ந்துள்ளது. இந்தியச் சுற்றுப்பயணத்தில் பவுமா எப்போது ரன்கள் குவிப்பார் என தெ.ஆ. ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT