செய்திகள்

சாம்சனின் போராட்டம் வீண்! 9 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி! 

6th Oct 2022 11:03 PM

ADVERTISEMENT

 

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் லக்னெளவில் இன்று நடைபெறுகிறது.

லக்னெளவில் இன்று காலை முதல் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கத் தாமதமானது. பிறகு டாஸ் நிகழ்வு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்களுக்கு 249 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசென் 74 ரன்களும், மில்லர் 75 ரன்களும், டி காக் 48 ரன்களும் எடுத்தனர். 

அடுத்த ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் 4 ரன்னிலும், கில் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்கூர் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் தனியாக போராடினார். 2 ஓவர்களுக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட பொழுது சாம்சன் நான் ஸ்டிரைக்கர் முனையிலே இருந்து அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 20 ரன்களை எடுத்த சாம்சன் மொத்தமாக 63 பந்துகளில் 86 ரன்களை எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியாக, இந்திய அணி 40 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT