செய்திகள்

முதல் ஒருநாள்: இந்திய அணியில் இரு வீரர்கள் அறிமுகம்!

6th Oct 2022 03:54 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் லக்னெளவில் இன்று நடைபெறுகிறது.

லக்னெளவில் இன்று காலை முதல் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கத் தாமதமானது. பிறகு டாஸ் நிகழ்வு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜ் கெயிக்வாட், பிஸ்னோய் அறிமுகம் ஆகியுள்ளார்கள். காயம் காரணமாக தெ.ஆ. அணியைச் சேர்ந்த டுவைன் பிரிடோரியஸ் ஒருநாள் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்திய அணி

ADVERTISEMENT

ஷிகர் தவன் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய், அவேஷ் கான், சிராஜ். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT