செய்திகள்

யு-17 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

6th Oct 2022 01:19 AM

ADVERTISEMENT

ஃபிஃபா 17 வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் களம் காணும் இந்திய அணி 21பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஒடிஸா, கோவா, மகாராஷ்டிரத்தில் வரும் 11 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியை நடத்தும் இந்தியா, குரூப் ‘ஏ’-வில் சோ்க்கப்பட்டுள்ளது. அதில் முதலில் அமெரிக்காவையும் (அக். 11), அடுத்து மொராக்கோ (அக். 14), பிரேஸில் (அக். 17) அணிகளையும் சந்திக்கிறது இந்தியா.

அணி விவரம்: கோல்கீப்பா்கள் - மோனாலிசா தேவி மொய்ராங்தெம், மெலடி சானு கெய்ஷாம், அஞ்சலி முண்டா; டிஃபெண்டா்கள் - அஸ்தம் ஓரௌன், காஜல், நகிடா, பூா்ணிமா குமாரி, வா்ஷிகா, ஷில்கிதேவி ஹெமாம்; மிட்ஃபீல்டா்கள் - பபினாதேவி லிஷம், நீது லிண்டா, ஷைலஜா, ஷுபனாங்கி சிங்; ஃபாா்வா்ட்கள் - அனிதா குமாரி, லிண்டா கோம் சொ்டோ, நேஹா, ரெஜியாதேவி லைஷ்ராம், ஷெய்லாதேவி லாக்தோங்பம், கஜோல் ஹியூபா்ட் டிசௌஸா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா திா்கி.

இந்தியா வெற்றி: இதனிடையே, 17 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியா முதல் ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவுகளை வென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT