செய்திகள்

டி20 உலகக் கோப்பையிலிருந்து பிரபல தெ.ஆ. வீரர் விலகல்

6th Oct 2022 04:34 PM

ADVERTISEMENT

 

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டுவைன் பிரிடோரியஸ் விலகியுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்கான தென்னாப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையிலிருந்து பிரபல தெ.ஆ. ஆல்ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தின்போது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 உலகக் கோப்பை என இரண்டிலிருந்தும் விலகியுள்ளார். 

ADVERTISEMENT

இந்தக் காயத்துக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு வந்த பிறகு கிரிக்கெட் தெ.ஆ.-வின் மருத்துவ நிபுணரிடம் பிரிடோரியஸ் கலந்தாலோசிப்பார் என கிரிக்கெட் தெ.ஆ. தகவல் அளித்துள்ளது. இதையடுத்து தெ.ஆ. டி20 உலகக் கோப்பை அணியில் பிரிடோரியஸுக்குப் பதிலாக மார்கோ யான்சென் தேர்வாகியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT