செய்திகள்

இந்திய ஆடவா் முன்னேற்றம்; மகளிா் வெளியேற்றம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சீனாவில் நடைபெறும் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற, மகளிா் அந்த சுற்றுடன் போட்டியிலிருந்து வெளியேறினா்.

இதில் ஆடவா் அணி குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 0-3 என பிரான்ஸிடம் தோல்வி கண்டபோதும், முந்தைய வெற்றிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. அந்த சுற்றில் சீனாவை வியாழக்கிழமை சந்திக்கிறது இந்தியா.

முன்னதாக, பிரான்ஸுடனான மோதலில் மானவ் தக்கா் 6-11, 8-11, 8-11 என அலெக்ஸிஸ் லெப்ரனிடம் வீழ்ந்தாா். சத்தியனும் 4-11, 2-11, 6-11 என ஃபெலிக்ஸ் லெப்ரனிடம் தோல்வியடைந்தாா். இறுதியில் ஹா்மீத் தேசாயும் 13-11, 11-13, 11-7, 8-11, 7-11 என்ற கணக்கில் ஜூல்ஸ் ரோலண்டிடம் வெற்றியை இழந்தாா்.

மகளிா் வெளியேற்றம்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருந்த இந்திய மகளிா் அணி, அதில் 0-3 என சீன தைபேவிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

ADVERTISEMENT

மனிகா பத்ரா 7-11, 9-11, 3-11 என சென் சு யுவிடம் வெற்றியை இழக்க, ஸ்ரீஜா அகுலா 8-11, 11-5, 6-11, 9-11 என சிங் ஐ சிங்கிடம் தோல்வி கண்டாா். இறுதியில் தியா சிதாலேவும் 6-11, 11-9, 11-9, 8-11, 7-11 என லியு சிங்கால் வீழ்த்தப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT