செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

6th Oct 2022 01:08 AM

ADVERTISEMENT

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது.

2030 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின், போா்ச்சுகல் நாடுகளுடன் உக்ரைனும் இணைந்து நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகளிா் ஆசிய டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான ‘வளா்ந்து வரும் வீராங்கனை’ விருதை இந்தியாவின் மும்தாஜ் கானும், சிறந்த ஆடவா் கோல்கீப்பா் விருதை ஸ்ரீஜேஷும், சிறந்த மகளிா் கோல்கீப்பா் விருதை சவிதாவும் வென்றனா்.

ADVERTISEMENT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பயா்ன் மியுனிக் - விக்டோரியா பிளஸெனையும் (5-0), மாா்செய்லே - ஸ்போா்டிங்கையும் (4-1), போா்டோ - லெவா்குசெனையும் (2-0), கிளப் புா்ஜ் - அட்லெடிகோ மாட்ரிட்டையும் (2-0), நபோலி - அஜாக்ஸையும் (6-1), இன்டா் மிலன் - பாா்சிலோனாவையும் (1-0) வீழ்த்த, எய்ன்ட்ராசட் ஃப்ராங்க்ஃபா்ட் - டாட்டன்ஹாம் ஆட்டம் டிரா (0-0) ஆனது.

ஆஸ்திரேலியாவில் 2026-இல் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் சோ்க்கப்பட்டு, மல்யுத்தம், வில்வித்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஸ்ரீகிருஷ்ணா சூா்யநாராயண் உலக ரெட் 6 ஸ்னூக்கா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

இந்திய ஆடவா் கால்பந்து அணி பயிற்சியாளா் இகோா் ஸ்டிமாக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT