செய்திகள்

டி20 உலகக் கோப்பை: நடுவர் குழுவில் இடம்பெற்ற ஒரே இந்தியர்!

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நடுவர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய நடுவர் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 16 கள நடுவர்கள் கொண்ட பட்டியலில் இந்திய நடுவரான நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். இதுதவிர 4 ஆட்ட நடுவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

கள நடுவர்கள்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், அலீம் டர், ஆஸான் ராஸா, கிறிஸ்டோபர் பிரெளன், கிறிஸ்டோபர் கஃபானி, ஜோயல் வில்சன், குமார தர்மசேனா, லேங்டன் ருசர், மரைஸ் எராஸ்மஸ், மைக்கேல் கவ், நிதின் மேனன், பால் ரீஃபல், பால் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பாரோ, ராட்னி டக்கர். 

ஆட்ட நடுவர்கள்: ஆண்ட்ரு பைகிராஃப்ட், கிறிஸ்டோபர் பிராட், டேவிட் பூன், ரஞ்சன் மதுகலே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT