செய்திகள்

ரிஷப் பந்த் பிறந்த நாளுக்கு நடிகை ஊர்வசி என்ன செய்தார் தெரியுமா! 

4th Oct 2022 03:25 PM

ADVERTISEMENT

 

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது.

ஊர்வசி ரெளடேலா ஒரு நேர்காணலில் “வாரணாசியில் எனக்குப் படப்பிடிப்பு இருந்தது. தில்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. இரவு தான் தில்லிக்கு வந்தேன். தில்லியிலும் முழு நாளும் படப்பிடிப்பு இருந்தது. அப்போது என்னைப் பார்க்க வந்த ஆர்.பி. ஹோட்டலிலேயே காத்திருந்தார். அறைக்கு வந்து நான் தூங்கிவிட்டேன். எந்த போன் அழைப்பையும் நான் எடுக்கவில்லை. போனை எடுத்துப் பார்த்தால் 16 மிஸ்ட் கால்கள் இருந்தன. இது எனக்குக் கவலையை அளித்தது. என்னைப் பார்க்க ஒருவர் வந்து அவ்வளவு நேரம் காத்திருந்தும் என்னால் பார்க்க முடியவில்லை” எனக் கூறியிருந்தார். பின்னர் ரிஷப் இதை மறுத்து எழுதியிருந்தார்.  

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது ரிஷப் பந்த் பிறந்த நாளான இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் என ரீல்ஸ் விடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் ரசிகர்கள் ரிஷப் பந்தை டேக் செய்து இது உங்களுக்காகதான் என கமெண்ட் செய்து வருகின்றனர். ரிஷப் ஊர்வசி என ட்விட்டரில் மீம்ஸ்களும் வைரலாக சுற்றிவருகிறது. 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

ADVERTISEMENT
ADVERTISEMENT