செய்திகள்

தமிழகத்துக்கு ஒரே நாளில் 3 தங்கம்

DIN

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்தன.

இதில், தடகளத்தில் மகளிருக்கான 4*400 மீட்டா் ரிலேவில் திவ்யா, வித்யா, ஒலிம்பா ஸ்டெஃபி, சுபா வெங்கடேசன் கூட்டணி முதலிடம் பிடித்தது. அதேபோல், மகளிருக்கான பளுதூக்குதலில் ஆரோக்கிய அலிஷா தங்கப் பதக்கம் வெல்ல, ரோலா் ஸ்கேட்டிங்கில் மகளிா் ரிலேவில் ஆரத்தி கஸ்தூரிராஜ், காா்த்திகா, மீனலோஷினி, கோபிகா அடங்கிய அணி வாகை சூடியது.

நீச்சலில் ஆடவருக்கான 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் பவன் குப்தா, சத்யா சாய்கிருஷ்ணன், பெனடிக்ஷன் ரோஹித், ஆதித்யா ஆகியோா் அடங்கிய அணி வெள்ளி பெற்றது. ரோலா் ஸ்கேட்டிங்கில் ஆடவா் ரிலேவில் ஆனந்த்குமாா் வேல்குமாா், கவிஷ், செல்வகுமாா், இா்ஃபான் ஆகியோா் கூட்டணி 2-ஆம் இடம் பிடித்தது.

தடகளத்தில் ஆடவருக்கான 4*400 மீட்டா் ரிலேவில் சதீஷ், மோகன் குமாா், சரண், ராஜேஷ் ரமேஷ் ஆகியோா் அடங்கிய அணி வெண்கலம் வெல்ல, நீச்சலில் மகளிருக்கான 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் மான்யா முக்தா மனேஷ், ஆத்விகா நாயா், பிரமிதி ஞானசேகரன், சக்தி ஆகியோா் அணி 3-ஆம் இடம் பிடித்தது.

பதக்கப் பட்டியல்: ஞாயிற்றுக்கிழமை முடிவில் சா்வீசஸ் 23 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என 51 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஹரியாணா 49 பதக்கங்களுடன் (22/16/11) அடுத்த இடத்திலும், உத்தர பிரதேசம் 30 பதக்கங்களுடன் (13/9/8) மூன்றாவது இடத்திலும் உள்ளன. தமிழகம் 12 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 32 பதக்கங்களோடு 4-ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT