செய்திகள்

நவராத்திரி கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்ட கிறிஸ் கெயில்! (விடியோ) 

3rd Oct 2022 05:04 PM

ADVERTISEMENT

நவராத்திரி கொண்டாட்டத்தில் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் நடனமாடிய விடியோ சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

இந்த ஆண்டு, நவராத்திரி செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஒன்பது நாள்கள்  கொண்டாடப்படுகிறது. 

இதையும் படிக்க: ‘காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் போராடி வருகிறோம்’- கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு!

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பி.வி. சிந்து நடனமாடிய விடியோ வைரலானது. அதை தொடர்ந்து முன்னாள் இந்திய வீரர் சேவாக், மேற்கிந்திய வீரர்கிறிஸ் கெயில் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் வீரர்கள் நவராத்திரியை ஜோத்பூரில் கொண்டாடினர். இதில் கிறிஸ் கெயில் பெண்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அதன் விடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் அதானி குழுமம் வாங்கியுள்ள குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை சேவாக் தலைமையேற்று வழி நடத்துகிறார். ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ள இந்தணி இன்று பர்கட்டுல்லா கான் மைதானத்தில் விளையாட உள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT