செய்திகள்

டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி! (ஹைலைட்ஸ் விடியோ) 

3rd Oct 2022 03:19 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. 

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் மொயின் அலி  தலைமையிலான இங்கிலாந்து அணி 6வது போட்டியின் முடிவில் 3-3 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் கடைசிப் போட்டி (7வது டி20 போட்டி) முக்கியமானதாக இருந்தது. 

டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது பாகிஸ்தான். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 209 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 47 பந்துகளில் 78 ரன்களும், ஹாரி புரூக் 29 பந்துகளில் 46 ரனகளும் எடுத்தனர். 

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 56 ரன்களை எடுத்தார். நட்சத்திர ஆட்டக்காரர் ரிஸ்வான் 1 ரன்னிலும், பாபர் அசாம் 4 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளும், டாப்ளி, சாம் கர்ரன், ரஷித் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

ADVERTISEMENT

7 போட்டிகள் தொடரினை 4-3 என வென்று தொடரினை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. ஹாரி புரூக் தொடர் நாயகனாகவும், டேவிட் மலான் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT