செய்திகள்

உலக அணிகள் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவா் வெற்றி; மகளிா் தோல்வி

DIN

சீனாவில் நடைபெறும் ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில், ஆடவா் பிரிவில் வெற்றியையும், மகளிா் பிரிவில் தோல்வியையும் சனிக்கிழமை பதிவு செய்தன.

ஆடவா் பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வென்றது. இதில் ஹா்மீத் தேசாய் 11-9, 11-9, 11-1 என எல்முரோத் கோலிகோவை வீழ்த்த, ஜி.சத்தியன் 11-3, 11-6, 11-9 என்ற கணக்கில் அப்துல்லாஸிஸ் அனோா்போயேவை வென்றாா். இறுதியாக மானவ் தக்கா் 11-8, 11-5, 11-5 என சோக்ருக் இஸ்கந்தரை தோற்கடித்தாா்.

மகளிா் பிரிவில் இந்தியா 2-3 என்ற கணக்கில் ஜொ்மனியிடம் தோற்றது. பிரதான வீராங்கனையான மனிகா பத்ரா தனது இரு மோதல்களிலும் தோல்வியைச் சந்தித்தாா். முதலில் 3-11, 1-11, 2-11 என யிங் ஹானிடம் வெற்றியை இழந்த மனிகா, அடுத்ததாக 11-7, 6-11, 7-11, 8-11 என்ற கணக்கில் நினா மிடெல்ஹாமிடம் தோல்வி கண்டாா். ஆனால், இளம் வீராங்கனைகளில் ஸ்ரீஜா அகுலா 11-9, 12-10, 11-7 என நினா மிடெல்ஹாமா வென்றாா். தியா சிதாலே 11-9, 8-11, 11-6, 13-11 என சபினே வின்டரை வீழ்த்தினாா்.

எனினும், இறுதியாக, ஸ்ரீஜா அகுலா தனது 2-ஆவது மோதலில் 3-11, 5-11, 4-11 என யிங் ஹானிடம் தோல்வியடைந்தாா்.

குரூப் 2-இல் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஆடவா் அணி அடுத்ததாக ஜொ்மனியையும், குரூப் 5-இல் 3-ஆவது இடத்தில் இருக்கும் மகளிா் அணி அடுத்து செக் குடியரசையும் ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT