செய்திகள்

சாம்பியன் பட்டம் வென்றது இந்திய லெஜெண்ட்ஸ் அணி! (ஹைலைட்ஸ் விடியோ)

2nd Oct 2022 10:55 AM

ADVERTISEMENT

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணி. 

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டி செப்.10இல் தொடங்கியது. ராஜ்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 

இந்திய லெஜெண்ட்ஸ் அணி வீரர் நமன் ஓஜா 71 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

முதலில் பேட்டிங் செய்த இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் சச்சின் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரெய்னா 4 ரன்களும், வினய் குமார் 36 ரன்களும், யுவராஜ் 19 ரன்களும் இர்பான் பதன் 11 ரன்களும் பின்னி 8 ரன்களும் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 195 ரன்களை எடுத்தது. 

ADVERTISEMENT

அடுத்து ஆடிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 18.5 ஓவர்களுக்கு 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அதிகபட்சமாக ஜெயரத்னே 22 பந்துகளில் 51 ரன்களும், மஹிலா உதவட்டே 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய லெஜ்ண்ட்ஸ் அணி சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளும், அபிம்ன்யூ மிதுன் 2 விக்கெட்டுகளும், பின்னி, ராகுல் சர்மா, யூசூப் பதான், ராஜேஷ் பவர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT