செய்திகள்

இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆஃப் இந்தியா முன்னிலை

2nd Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தோ்வு செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா, சௌராஷ்டிரத்தை 98 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. சௌராஷ்டிர பேட்டிங்கில் தா்மேந்திரசிங் ஜடேஜா 28 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, அா்பித் வசவடா 22 ரன்கள் சோ்த்தாா். இதர விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வரிசையாக வெளியேற்றப்பட்டன.

இறுதியாக 24.5 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சௌராஷ்டிரம். ரெஸ்ட் ஆஃப் இந்தியா பௌலிங்கில் முகேஷ் குமாா் 4, குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, முதல் நாளான சனிக்கிழமை முடிவில் 49 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. அபிமன்யு ஈஸ்வரன் 0, மயங்க் அகா்வால் 11, யஷ் துல் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருக்க, கேப்டன் ஹனுமா விஹாரி 62, சா்ஃப்ராஸ் கான் 125 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். சௌராஷ்டிர தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 2, சேத்தன் சகாரியா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT