செய்திகள்

பாரம்பரிய நடனமாடி அசத்திய பி.வி.சிந்து! (விடியோ)

2nd Oct 2022 12:45 PM

ADVERTISEMENT


பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து குஜராத்தில் பாரம்பரிய நடனமாடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. 

நவராத்திரியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.வி.சிந்து, பேட்மிண்டன் முன்னாள் வீராங்கனையான திருப்தி முர்குண்டே, நீளம் தாண்டுதல் போட்டி வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோருடன் நடனமாடினார்.

பாரம்பரிய நடனமாடி அசத்திய பி.வி.சிந்து

குஜராத்தில் தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் நவராத்திரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேடையில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பி.வி.சிந்து, பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடி மகிழ்ந்தார். 

பி.வி.சிந்துவுடன், பேட்மிண்டன் முன்னாள் வீராங்கனையான திருப்தி முர்குண்டே, நீளம் தாண்டுதல் போட்டி வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோரும் மேடையில் நடனமாடினார். 

 

இந்த விடியோவை இந்திய விளையாட்டு ஆணையம் தங்களது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT