செய்திகள்

அதிரடியில் மிரட்டிய இந்தியா: தென்னாப்பிரிக்காவுக்கு 238 ரன்கள் இலக்கு

2nd Oct 2022 08:56 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 237 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி குவஹாட்டியில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பந்துவீச்சினைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். அதனால் இந்திய அணியின் ரன்ரேட் தொடக்கத்திலிருந்தே 10க்கும் கீழ் குறையவில்லை. பவர் பிளேவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 37 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஐபோன் வாங்கித் தர தாமதம் செய்த பெற்றோர், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

அதன்பின், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் அரைசதம் குவித்து அசத்தினார். அவர் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்து கேசவ் மகாராஜ் சுழலில் வீழ்ந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி அவ்வப்போது பவுண்டரிகளை விரட்ட சூர்யகுமார் தனது வழக்கமான வாணவேடிக்கைகளால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். சூர்யகுமார் களத்திற்கு வந்ததும் தெரியவில்லை மின்னல் வேகத்தில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் குவித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் திணறினர். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 18.1 ஓவரின் போது துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: இந்தோனேசிய கால்பந்து போட்டியில் ரசிகர்கள் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு!

பின்னர், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். அவரது பங்கிற்கு தென்னாப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவர் 7 பந்துகளில் 17 ரன்கள் குவித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 28 பந்துகளில் 49 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்குகிறது தென்னாப்பிரிக்கா அணி.

Tags : ind vs sa t20
ADVERTISEMENT
ADVERTISEMENT