செய்திகள்

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா

2nd Oct 2022 11:28 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி குவஹாட்டியில் ஞாயிற்றுக்கி்ழமை நடைபெற்றது. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. 

இதையும் படிக்க |  மின்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை: புதுச்சேரி அரசு

ADVERTISEMENT

இந்திய அணியின் தரப்பில் அதிரடி காட்டிய சூர்யகுமார் வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் குவித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 28 பந்துகளில் 49 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதனையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்குகியது தென்னாப்பிரிக்கா அணி. முதலில் களமிறங்கிய தெம்பா பவுமா டக் அவுட் ஆக தென்னாப்பிரிக்க அணி திணறியது. எனினும் குவிண்டன் டி காக் அதிரடியாக ஆடி அணியின் ரன்களை உயர்த்தினார். 

இதையும் படிக்க | 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்.. காரணங்கள் என்ன?

அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளுக்கு 69 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸ்களும் அடக்கம். தென்னாப்பிரிக்காவின் ரிலி ரோசோ 2 பந்துகளில் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 106 ரன்கள் எடுத்த டேவிட் மில்லர்  ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. 

Tags : T20 INDvsSA
ADVERTISEMENT
ADVERTISEMENT