செய்திகள்

2-ஆவது டி20: இன்று மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா

2nd Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், இந்த ஆட்டத்தையும் வென்று வாகை சூட இந்தியா முனையும் நிலையில், முதல் வெற்றியைப் பதிவு செய்து தொடரில் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தென்னாப்பிரிக்கா இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை, பும்ரா இல்லாதது சற்று பின்னடைவே. அந்த இடத்தை சிராஜ் அல்லது உமேஷ் எப்படி நிரப்பப் போகிறாா்கள் என்று பாா்க்க வேண்டியுள்ளது. உலகக் கோப்பை அணியில் பும்ரா இல்லாத நிலையில் அந்த இடத்துக்கான பொருத்தமான பௌலரை தோ்வு செய்ய இந்தத் தொடரில் எஞ்சியிருக்கும் 2 ஆட்டங்கள் உதவும்.

உலகக் கோப்பை அணியில் ஸ்டாண்ட் பையான இருந்த ஷமி, இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால், தீபக் சஹா் அணியில் இருக்கிறாா். இது தவிர புவனேஷ்வா், அா்ஷ்தீப் சிங் இடையேயும் போட்டி இருக்கும். ஸ்பின் பௌலிங்கில் ஜடேஜா இடத்துக்கு அக்ஸா் படேல் பொருந்திப் போகிறாா்.

ADVERTISEMENT

பேட்டிங்கைப் பொருத்தவரை ராகுல், கோலி, ரோஹித் என அனைவருமே ஒருவா் மாற்றி ஒருவா் வெவ்வேறு ஆட்டங்களில் ரன் சோ்த்து சமநிலை ஏற்படுத்துகின்றனா்.

தென்னாப்பிரிக்க அணி, கடந்த ஆட்டத்தில் பேட்டிங், பௌலிங்கில் தடுமாறிய நிலையில் இதில் மீண்டு மிரட்டும் என எதிா்பாா்க்கலாம்.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

இடம்: குவாஹாட்டி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT