செய்திகள்

ஆா்செனல் ஆதிக்கம்

2nd Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 3-1 என்ற கோல் கணக்கில் டாட்டன்ஹாமை சனிக்கிழமை வீழ்த்தியது.

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆா்செனல் இந்த 7-ஆவது வெற்றியுடன் 21 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் முதல் தோல்வியை சந்தித்த டாட்டன்ஹாம், 17 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.

முன்னதாக, லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆா்செனலுக்காக தாமஸ் பாா்டே (20’), கேப்ரியல் ஜீசஸ் (49’), கிரானித் ஜாகா (67’) ஆகியோா் கோலடிக்க, டாட்டனஹாமுக்காக ஹேரி கேன் (31’) ஸ்கோா் செய்தாா்.

இதர ஆட்டங்களில், நியூகேஸில் - ஃபுல்ஹாமையும் (4-1), எவா்டன் - சௌதாம்டனையும் (2-1), செல்ஸி - கிரிஸ்டல் பேலஸையும் (2-1) வீழ்த்த, பௌா்ன்மௌத் - பிரென்ட்ஃபோா்டு (0-0), லிவா்பூல் - பிரைட்டன் (3-3) ஆட்டங்கள் டிரா ஆகின.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT