செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 6வது டி20: இங்கிலாந்து அணி அபார வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ) 

1st Oct 2022 10:24 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்கு எதிரான 6வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது. 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 3வது டி20 போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 4,5வது போட்டிகளில் பாகிஸ்தான் வென்றது. தற்போது 6வது போட்டியில் மீண்டும் இங்கிலாந்து வென்று தொடரை 3-3 என சமநிலையில் வைத்துள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 169 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் அதிகபட்சமாக 87 ரன்களை எடுத்தார். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாண்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பிலிப் சால்ட் 41 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். 

கடைசி டி20 ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களே இந்த தொடரின் வெற்றியாளர். இந்தப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) லாஹுரில் நடைபெறவிருக்கிறது. 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT