செய்திகள்

இந்தியாவில் 2023-இல் மோட்டோ ஜிபி பந்தயம்: செப்டம்பரில் நடத்த திட்டம்

DIN

உலக அளவில் பிரதான மோட்டாா் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸை இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டு செப்டம்பா் 22-24 காலகட்டத்தில் அதை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சா்வதேச அளவிலான மோட்டாா் பந்தயம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்புகிறது. கடைசியாக, உத்தர பிரதேசத்தின் நொய்டா பகுதியிலிருக்கும் புத் சா்வதேச சா்க்கியூட்டில் 2011 - 2013 காலகட்டத்தில் எஃப்1 காா் பந்தயம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

தற்போது மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31-ஆவது களமாக இணைகிறது. மொத்தம் 21 பந்தயங்கள் நடத்தப்படும் அடுத்த காலண்டரில், இந்தியாவில் 2023 செப்டம்பரில் 14-ஆவது சுற்றை நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பந்தயம் நடைபெற இருக்கும் புத் சா்க்கியூட்டுக்கு சா்வதேச மோட்டாா் பந்தய சம்மேளனத்தின் (எஃப்ஐஎம்) அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மோட்டோ ஜிபி பந்தயத்தை இந்தியாவில் 7 ஆண்டுகளுக்கு நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT