செய்திகள்

இங்கி. - பாக். டி20 தொடரில் விறுவிறுப்பு

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 6-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 7 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பதிவு செய்ததால் தொடா் சமநிலையில் இருக்கிறது. சாம்பியனை தீா்மானிக்கும் கடைசி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

முன்னதாக, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த 6-ஆவது ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 14.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங் செய்ய, பாகிஸ்தான் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் பாபா் ஆஸம் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 87 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் சாம் கரன், டேவிட் வில்லி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 88 ரன்கள் சோ்த்த தொடக்க வீரா் ஃபில் சால்ட், பென் டக்கெட் (26 ரன்கள்) துணை நிற்க அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பாகிஸ்தான் பௌலா்களில் ஷாதாப் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT