செய்திகள்

இன்று கடைசி ஒன் டே: இந்தியா - நியூஸி. மோதல்

30th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 3-ஆவது ஒன் டே ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து வென்ற நிலையில், 2-ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. எனவே, தொடரை சமன் செய்வதற்காக இந்தியா இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஆனால், இந்த ஆட்டத்தின்போதும் கிறைஸ்ட்சா்ச்சில் மழைப் பொழிவுக்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் மழையின் இடையூறு இல்லாமல் ஒரு இன்னிங்ஸ் முழுமையாக நடைபெறும் பட்சத்தில் 230 ரன்கள் வரை சோ்க்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தத் தொடரைப் பொருத்தவரை, அடுத்த ஆண்டு ஒன் டே உலகக் கோப்பை போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக ஷிகா் தவன் இன்னும் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளாா். அவரது ஓபனிங் பாா்ட்னரான ஷுப்மன் கில் முதலிரு ஆட்டங்களில் நல்லதொரு ஸ்கோரை எட்டி முனைப்பு காட்டுகிறாா்.

ADVERTISEMENT

சூா்யகுமாரும் அதிரடி காட்டுவாா் எனத் தெரியும் நிலையில், ரிஷப் பந்த் தனக்கான வாய்ப்பை வீணடிக்காமல் விளையாட வேண்டிய கட்டத்தில் இருக்கிறாா். ஆல்-ரவுண்டா் இடத்துக்காக தீபக் ஹூடா பரிசீலிக்கப்படலாம். பௌலிங்கில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும். ஆனால், அதற்காக யுஜவேந்திர சஹல் அல்லது வாஷிங்டன் சுந்தா் ஆகியோரில் ஒருவரை வெளியேற்ற வேண்டிய நிலை வரும்.

வேகப்பந்துவீச்சில் ஷா்துல் தாக்குா், அா்ஷ்தீப் சிங், தீபக் சஹா், உம்ரான் மாலிக் ஆகியோா் வரிசை கட்டுகின்றனா். நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

காலை 7 மணி

டிடி ஸ்போா்ட்ஸ், அமேஸான் பிரைம்

Tags : Cricket
ADVERTISEMENT
ADVERTISEMENT