செய்திகள்

3-வது ஒருநாள்: வாஷிங்டன் சுந்தரின் அரை சதத்தால் 219 ரன்கள் எடுத்த இந்தியா

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20யை இந்தியா வென்றது. 3-வது டி20 ஆட்டம் டை ஆன காரணத்தால் டி20 தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

3-வது ஒருநாள் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக மில்ன் தேர்வானார். இந்திய அணியில் மாற்றமில்லை.

2 பவுண்டரிகள் அடித்த ஷுப்மன் கில் 13 ரன்களிலும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்த கேப்டன் ஷிகர் தவன் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ரிஷப் பந்த் 10, சூர்யகுமார் யாதவ் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். 25 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 

59 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் நன்கு விளையாடி வந்த ஷ்ரேயஸ் ஐயர், 49 ரன்களில் ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது நிலை வீரராகக் களமிறங்கினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். இதன்பிறகு தீபக் ஹூடா, தீபக் சஹார் தலா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு இந்திய அணிக்கு ஓரளவு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு வாஷிங்டன் வசம் வந்தது. அவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தார். 

இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. 64 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து இந்திய அணியின் தூணாக இருந்தார் வாஷிங்டன் சுந்தர். ஆடம் மில்ன், டேரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT