செய்திகள்

உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்த மேலும் 4 அணிகள்!

30th Nov 2022 12:15 PM

ADVERTISEMENT

 

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தகுதியடைந்துள்ளன.  

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. இந்நிலையில் தற்போது மேலும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்குத் தகுதியடைந்தன. 

நேற்றைய ஆட்டத்தில் செனகல் அணி ஈகுவடாரை 2-1 எனவும் நெதர்லாந்து அணி செனகலை 2-0 எனவும் அமெரிக்க அணி ஈரானை 1-0 எனவும் இங்கிலாந்து அணி வேல்ஸை 3-0 எனவும் தோற்கடித்தன. இதையடுத்து நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன. ஆக இதுவரை 7 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 9 அணிகள் தகுதி பெற வேண்டிய நிலைமையில் உள்ளன. 

ADVERTISEMENT

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரு ஆட்டங்களில் எந்தந்த அணிகள் மோதவுள்ளன என்பது தெரியவந்துள்ளது. டிசம்பர் 3 அன்று அமெரிக்கா - நெதர்லாந்து அணிகளும் டிசம்பர் 4 அன்று இங்கிலாந்து - செனகல் அணிகளும் மோதவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT