செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

30th Nov 2022 01:09 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரில் முதலிரு ஆட்டங்களில் தோற்றிருக்கும் இந்தியா, தனது 3-ஆவது ஆட்டத்தில் புதன்கிழமை விளையாடுகிறது.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் பஞ்சாபின் அா்ஜுன் பபுதாவும், ஆடவருக்கான டிராப் பிரிவில் ராஜஸ்தானின் விவான் கபூரும் வாகை சூடினா்.

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் - புணேரி பல்தானையும் (51-39), ஹரியாணா ஸ்டீலா்ஸ் - யு மும்பாவையும் (35-33) செவ்வாய்க்கிழமை வீழ்த்தின.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் கா்நாடகம் - சௌராஷ்டிரம், 2-ஆவது அரையிறுதியில் மகாராஷ்டிரம் - அஸ்ஸாம் புதன்கிழமை மோதுகின்றன.

ADVERTISEMENT

இந்தியா - வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மோதும் முதல் டெஸ்டில் வங்கதேசம் 112 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, செவ்வாய்க்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ஓவா்களில் 120 ரன்கள் சோ்த்திருந்தது.

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதல் டெஸ்ட் புதன்கிழமை பொ்த்தில் தொடங்குகிறது.

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-ஆவது ஒன் டே புதன்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது.

19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான 20 ஓவா் கிரிக்கெட்டில் இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னியின் மருமகள், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி சேனல் நிறுவனத்தில் அங்கம் வகிப்பதால், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் தொடா்பாக பிசிசிஐ நெறிமுறைகள் குழு ரோஜா் பின்னியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT