செய்திகள்

’அந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை’: ஆத்திரமடைந்த யோகி பாபு

29th Nov 2022 01:01 PM

ADVERTISEMENT

 

விரைவில் வெளியாகவுள்ள புதிய படத்தின் தான் நாயகனாக நடிக்கவில்லை என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்தர நடிகராகவும் பிசியாக இருப்பவர் நடிகர் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் என உச்சநட்சத்திரங்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘தாதா’ படத்தின் புரோமோஷன்களில் யோகிபாபுவை நாயகனாக சித்தரித்து போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

ADVERTISEMENT

இதையும் படிக்க: துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!

அதனைப் பகிர்ந்த யோகிபாபு  “இந்தப் படத்தில் நான் நாயகனாக நடிக்கவில்லை. நிதின் சத்யாதான் ஹீரோ. நான் அவரின் நண்பராக நடித்திருக்கிறேன். நான் ஹீரோ இல்லை. நம்பாதீங்க மக்களே” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Tags : yogi babu
ADVERTISEMENT
ADVERTISEMENT